உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்தர் மேல்நிலை பள்ளி நிர்வாகி இல்லத் திருமண விழா

அரவிந்தர் மேல்நிலை பள்ளி நிர்வாகி இல்லத் திருமண விழா

புதுச்சேரி : புதுச்சேரி முத்தியால் பேட்டை அரவிந்தர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி இல்லத் திருமண விழா இ.சி.ஆர்.சாலையில் உள்ள கே.பி.எஸ்., திருமண நிலையத்தில் நடந்தது.விழாவில் மணமக்கள் சிவக்குமார்- அருணாதேவி ஆகியோரை, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அமைச்சர் சாய் சரவணன்குமார், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏக்கள்., பிரகாஷ் குமார், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.பி., ராமதாஸ், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏக்கள்., சாமிநாதன், நந்தா சரவணன், வையாபுரி மணிகண்டண், தீப்பாய்ந்தான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள்., சேர்மன் காசிலிங்கம், தனியார் பள்ளி கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை மணமக்களின் பெற்றோர்கள் அரவிந்த் குமார்- வாசுகி அரவிந்தகுமார்,ராமச்சந்திரன் - சந்திரிகா ராமசந்திரன் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை