மேலும் செய்திகள்
இருவேலி கண்மாய்க்குள் ஆட்டோ டிரைவர் உடல்
30-Jun-2026
புதுச்சேரி: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த ஆட்டோ டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நாவற்குளம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்தவர் சுப்ரமணி,50; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவிதா,47; சுப்ரமணி தினமும் மது குடித்து விட்டு வீட்டு வருவதால், தம்பதிக்குள் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுப்ரமணி மீண்டும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதில், விரக்தியடைந்த சுப்ரமணி ஜூலை 27 அதிகாலை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கவிதா புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Jun-2026