உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்தானந்த சுவாமி கோவிலில் 9ம் தேதி ஆவணி அவிட்டம்

சித்தானந்த சுவாமி கோவிலில் 9ம் தேதி ஆவணி அவிட்டம்

புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தையொட்டி 9ம் தேதி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. புதுச்சேரியில் வரும் 9ம் தேதி ஆவணி அவிட்டத்தையொட்டி, ரிக் யஜூர் வேதத்தை சேர்ந்த, பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சிக்கு, கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 5:30 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ஜ் வீதம், மதியம் 12:00 மணி வரை பூணுால் மாற்றிக் கொள்ளலாம். வரும் 10ம் தேதி காலை 5:30 மணிக்கு சமஷ்டி காயத்ரி ஜெபம் ேஹாமம் நடைபெறும். மேலும், விபரங்களுக்கு, 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ