உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறந்த பள்ளிக்கான விருது ஆச்சார்யா பள்ளிக்கு வழங்கல்

சிறந்த பள்ளிக்கான விருது ஆச்சார்யா பள்ளிக்கு வழங்கல்

புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளிக்கு சி போர் ஸ்கூல் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. செவன்த் எடிஷன் இ.டி.யு., எக்ஸ்போ குளோபல் நடத்திய, சி போர் ஸ்கூல் எக்ஸலன்ஸ் அவார்ட் சார்பில் 2026ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த இருபாலர் பள்ளிக்கான விருது வழங்கும் விழா, டில்லியில் உள்ள துவாரகா யசோபூமியில் நடந்தது. இதில் வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) புதுச்சேரி அளவில் முதல் இடத்தையும், இந்திய அளவில் 86வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த விருதினை பள்ளி தாளாளர் அரவிந்தன் வழிகாட்டுதல்படி, பள்ளி முதல்வர் முகமது பரூக் பெற்றுக் கொண்டார். ஆசிரியர் திறன் மற்றும் மாணவர் உறவு, கற்பித்தல் முறைகள் மற்றும் வளர்ச்சிக்கான சூழல், இணைப்பாடத்திட்ட செயல்பாடுகள், வாழக்கை திறன்கள், முன்னாள் மாணவர்கள் தொடர்புகள், உட்கட்டமைப்பு வசதிகள், பெற்றோர் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடு என அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளி இந்த விருதினை 6வது முறையாக தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !