உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆச்சார்யா கல்லுாரிக்கு விருது வழங்கல்

ஆச்சார்யா கல்லுாரிக்கு விருது வழங்கல்

 புதுச்சேரி: ஐ.சி.டி., ’26 விருது வழங்கும் விழாவில் ஆச்சாரியா தொழில்நுட்பக் கல்லுாரிக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. ஐ.சி.டி.,’26 சார்பில் விருது வழங்கும் விழா, புதுச்சேரி ஆனந்தா இன் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இவ்விழாவில், ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி மூன்று விருதுகளை வென்றுள்ளது. இதில் முதலாவதாக 2026ம் ஆண்டின் சிறப்பாக செயல்பட்ட கல்வி நிறுவனம், கல்லுாரி முதல்வர் குருலிங்கத்திற்கு சிறந்த கல்லுாரி முதல்வர் மற்றும் டீன் ஆனந்த்திற்கு சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தனர் பாராட்டினார்.  நிகழ்ச்சியில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்