மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் திடீரென்று தீப்பற்றிய கார்
15-Oct-2024
புதுச்சேரி : புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் சார்பில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கான 'அரிமதி தென்னகன் விருது' வழங்கும் விழா நடந்தது.நிறுவனர் அரிமதி இளம்பரிதி வரவேற்றார். கரிகாலன் தலைமை தாங்கினார். விழாவில், செல்வகணபதி எம்.பி., கலந்து கொண்டு, சண்முகம், அருள்மொழி, அரும்பாத்த ரத்தின விநாயகம், ஆனந்த வேலு, அந்தோணிசாமி, வாசு, ஜானகிராமன், மனோகர், மோகன்ராஜ் மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு அரிமதி தென்னகன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.அவர் பேசுகையில், 'எண்ணற்ற திறமைசாலிகள் பலர் வெளியில் தெரியாமல் உள்ளனர். ஒவ்வொரு துறையிலும் சாதிப்பதற்காக பலர் போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து, அரசு போன்று தனியார் அமைப்புகள் ஊக்கப்படுத்தினால், அவர்களால் சாதனைகளை நிகழ்த்தி நாட்டிற்கு பெருமை தேடித்தர முடியும்.மனிதர்களின் சிறு, சிறு முயற்சியை சக மனிதர்கள் பாராட்டுகின்ற பழக்கம் உருவாக வேண்டும். அப்போதுதான் நல்ல சமூகம் உருவாகும்' என்றார்.அரிமதி இளவேங்கை நன்றி கூறினார்.
15-Oct-2024