உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிகளுக்கு விழிப்புணர்வு 

மாணவிகளுக்கு விழிப்புணர்வு 

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். மண்ணாடிபட்டு சமுதாய நலவழி மைய தலைமை மருத்துவர் மணிமொழி பங்கேற்று, வளர் இளம்பருவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்.பின்னர், மாணவிகளுக்கான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியை ரேணு நன்றி கூறினார். ஆசிரியை பார்வதி ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி