உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மீன் வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு

 மீன் வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மீன்பிடித் துறைமுக அலுவலகத்தில், இந்திய அரசின் பொருளாதார மண்டலத்தில், மீன் வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் விதிகள் - 2025 குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. மத்திய அரசின் மீன்வள நலத்துறை அறிவுறுத்தலின் படி, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இந்திய மீன்வள அளவை தளம் இணைந்து நடத்திய கூட்டத்திற்கு, மீன்வளத் துறை இயக்குநர் முஹமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். இணை இயக்குநர் தெய்வசிகாமணி வாழ்த்தி பேசினார். துணை இயக்குநர் கோவிந்தசாமி, சென்னை இந்திய மீன்வள அளவைத் தளத்தின் சேவை பொறியாளர் காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்தியாவின் பொருளாதார மண்டலத்தை முறையாகவும், நீடித்த நிலையிலும் பயன்படுத்துவதன் அவசியத்தைப் பற்றியும், 24 மீட்டருக்கு மேல் உள்ள நீளமான இயந்திர மயமாக்கப்பட்ட மற்றும் பெரிய மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள், மீன்பிடிக்க முறையான அனுமதி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அனுமதியை 'ReALCRaft' என்ற மத்திய அரசின் ஆன்லைன் தளத்தில் இலவசமாகப் பெறலாம். மேலும், 24 மீட்டருக்கு குறைவான இயந்திர மயமாக்கப்பட்ட படகுகளுக்கு இந்த அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள் ளது என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். மீனவர்களுக்கு கடல் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதற்காக, எல்.இ.டி., விளக்கு மீன்பிடித்தல், ஜோடி இழுவலை மற்றும் அதிவேக இழுவலை மீன்பிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் மீன்பிடி நடைமுறைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு, இந்திய மீன்வள அளவைத் தளத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ