உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு திசைமாற்று நிகழ்ச்சி மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான நேர்மையின் பண்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் உதவிய பேராசிரியர் ஆரோக்கிய மேரி வரவேற்றார். தமிழ் துறை உதவிப் பேராசிரியர் சந்திரகலா வாழ்த்துரை வழங்கினார். மாநில என்.எஸ்.எஸ்., அதிகாரி சதிஷ்குமார் சிறப்புரையாற்றினார். மாணவி ஜீவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.என்.எஸ்.எஸ். மாணவி தாஸ்பிகா பானு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ