உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி : உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி, கடைபிடிக்கப்படுகிறது. மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம், பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், புதுச்சேரிஅறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. கம்பன் கலையரங்க வளாகத்தில் நடந்த ஊர்வலத்தை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ். மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், பொறியாளர் தேவாநந்தன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சதிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம், கம்பன் கலையரங்கில் இருந்து புறப்பட்டு, கடற்கரை சாலையில் நிறைவுபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை