உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சிகரத்தை நோக்கி என்ற உயர்கல்விக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண், மைலம் கல்வி குழுமத்தின் இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார், கல்வி ஆலோசகர் மற்றும் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தி, வின் யுவர் வீக்னஸ் நிறுவனர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில், அகாடமிக் டீன் அன்புமலர், முனைவர் அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார்,முனைவர் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை டீன் கைலாசம், முனைவர் முத்துலட்சுமி மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை