அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுச்சேரி: சைகை மொழி தின விழிப்புணர்வு கருத்தரங்கில், இலவச காது கருவிகள் வழங்கப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் செப்., 23ம் தேதி உலக சைகை மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சைகை மொழிக்கான அடிப்படை விளக்க கருத்தரங்கம் அரசு மருத்துவமனையில் நடந்தது. இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.ஆனந்தரங்கப்பிள்ளை, சத்தியா, கருணை பச்சையப்பன் சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாற்றுதிறன் மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், சமூக நலத் துறை இயக்குனர் ராகிணி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ஷமீம் முனிசா பேகம், குறை தீர்வு அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், டெப் எனாபில்ட் பவுண்டேஷன், யூத் போர் ஜாப் பவுண்டேஷன் பிரதிநிதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடி விளக்கம் அளித்தனர்.ஏற்பாடுகளை காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் ஸ்டாலின் சிவகுருநாதன் செய்திருந்தார்.