உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாகூர்: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் மக்களை நோக்கி மக்களுக்காக என்பதை வலியுறுத்தி சத்துணவு வார விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் திடலில், பெண்கள் ஊட்டச்சத்து மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி நிர்மலா தேவி வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளார் காங்கேயன், பெண்கள் ஊட்டசத்து மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து இன்னிசை இசை நிகழ்ச்சி மூலமாக கருத்துரையாற்றினார். இதில், கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், மணப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், கர்ப்பிணிகள், , பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை