உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாகூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தேசிய அளவில் 8ம் இடம்

 பாகூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தேசிய அளவில் 8ம் இடம்

பாகூர்: தேசிய அளவில், சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலில், பாகூர் போலீஸ் ஸ்டேஷன் 8ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. இந்தியாவில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து விருது, சான்று வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களை கண்டறிதல், கைது, குற்றத்தடுப்பு நடவடிக்கை, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விழிப்புணர்வு பிரசாரம், சமுதாயப் பணி, குற்ற பதிவேடுகளை பராமரித்தல், புகார் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2024ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. அதில், பாகூர் போலீஸ் ஸ்டேஷன் 8ம் இடத்தை பிடித்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்களின் மாநாட்டில், இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.நேற்று புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில், மேற்கண்ட தகவலை, ஐ.ஜி., அஜித்குமார் சிங்கலா அறிவித்து, பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை