உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி

பாகூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி

பாகூர்: பாகூரில் நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், முதலிடம் பிடித்த அணிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார்.பாகூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் நடந்தது. பத்து அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் பீகாக் மற்றும் ஸ்கார்பியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பீகாக் அணி 10 ஓவர்களில், 132 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஸ்கார்பியன்ஸ் அணி 8.1 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் திவாகர் 22 பந்துகளில் 48 ரன், அமர்நாத் 14 பந்துகளில் 30 ரன் எடுத்தனர்.இந்த சீசனில், அதிகபட்சமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பினை, முரளி கிருஷ்ணமூர்த்தியும், 168 ரன்களைப் பெற்று ஆரஞ்சு கேப்பினை சிவக்குமாரும் பெற்றனர். இதற்கான பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.௧ லட்ச ரூபாய் பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு, 50 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார்.இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் தவமுருகன், ஆனந்த் பயர் ஒர்க்ஸ் ஆனந்த், இளைஞர் காங்., பாபு, ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் மோகன்தாஸ், வி.கே. குரூப்ஸ் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை