உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறகு பந்து போட்டி: பரிசளிப்பு விழா

இறகு பந்து போட்டி: பரிசளிப்பு விழா

புதுச்சேரி:புதுச்சேரி 5 ஸ்டார் இறகு பந்து மன்றம், கட்டானா பிரிமியர் மாஸ்டர் லீக் ஸ்போர்ட்ஸ் இணைந்து, இரட்டையர்களுக்கான இறகு பந்து போட்டியை, நடத்தியது. புதுச்சேரி மூலக்குளம் சக்தி நகரில் உள்ள இறகு பந்து பயிற்சிமையத்தில்,50 முதல் 70 வயது வரை நிரம்பிய, கலப்பு இரட்டைகளுக்கான இறகு பந்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கேரளா, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பங்கேற்ற வீரர்கள், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில், சர்வதேச அளவில் மூத்த வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில், முன்னாள் அமைச்சர் தியாகராஜன், 5 ஸ்டார் நிர்வாக இயக்குனர் கலியமூர்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் பரிசு வழங்கி அணிகளை பாராட்டினர்.அமைப்பாளர் ஜிவானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை