உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாழை வியாபாரி சாவு: போலீசார் விசாரணை

வாழை வியாபாரி சாவு: போலீசார் விசாரணை

பாகூர் : கடலுார் மாவட்டம், வெள்ளக்கரை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 34; வாழைத்தார் வியாபாரி. இவர் கடந்த 13ம் தேதி இரவு புதுச்சேரி, முள்ளோடை பகுதிக்கு வந்தார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியது.இதில், தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால், அவருக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் இருந்து வந்த நிலையில், மணிகண்டனை நேற்று காலை அவரது உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் ஜெயக்கொடி அளித்த புகாரின்பேரில் , கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை