உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கும் முகாம்

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கும் முகாம்

புதுச்சேரி: குருசுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வங்கி கணக்கு துவங்கும் முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் சீனுவாசன் தலைமை தாங்கினார். முன்னணி பொதுத்துறை வங்கி அதிகாரிகள் ஜெயபாலன், துணை மேலாளர் கோபி, சரளா, சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வங்கி கணக்குகளை துவக்கினர். முகாமில் 75 மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டு புத்தகம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நித்யாநந்தினி, அன்பரசி, கிரிஜா, மர்சியால் அவிலா பாத்திமா, வித்யா, ரத்தனப்பிரியா, வசந்த பிரியா, ராஜராஜ சோழன், முருகசாமி, நர்மதா, கஸ்துாரி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை