உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீண்டும் துளிர்க்கும் பேனர் கலாசாரம் கல்யாண கோஷ்டிகள் அட்டூழியம்

மீண்டும் துளிர்க்கும் பேனர் கலாசாரம் கல்யாண கோஷ்டிகள் அட்டூழியம்

புதுச்சேரி : புதுச்சேரியில், மீண்டும் துளிர்க்கும் பேனர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் பூதாகரமாகி வந்த பேனர் கலாசாரம், கோர்ட் அதிரடி நடவடிக்கையால் போலீசார் சுறுசுறுப்படைந்து, பேனர்களை அகற்றினர். தடையை மீறி பேனர் வைப்போர் மீது வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை புகாரை பெற்று வழக்கு பதிவு செய்ய துவங்கி உள்ளனர்.இதனால் பேனர் கலாசாரம் சற்று குறைய துவங்கியுள்ளது. அதிகாரிகளின் கெடுபிடிகளால் பேனர் வைக்க அரசியல் பிரமுகர்கள் பேனர் வைக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.ஆனால், கல்யாண கோஷ்டிகள் மணமக்களை வாழ்த்தி திருமண மண்டபங்கள் முகப்புகளில் வரிசையாக பேனர் வைக்கின்றனர். சிலர் பல மீட்டர் துாரத்திற்கு வாழ்த்து பேனர் வைப்பது அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடனும் எடுக்காமல், மாதக் கணக்கில் அப்படியே விட்டுவிடுகின்றனர்.இதனால், ஏற்கனவே நெரிசலில் சிக்கி தவிக்கும் சாலைகளில், போக்குவரத்து இடையூறாக கல்யாண கோஷ்டிகள் வைக்கும் பேனரால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க, திருமண மண்டபங்கள் முன்பு பேனர் வைத்தால், மண்டப உரிமையாளர் மீதும், பேனர் அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் நிறுவனம் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திட வேண்டும். அப்போதுதான், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை