உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடையை மீறி பேனர்; 4 பேர் மீது வழக்கு

தடையை மீறி பேனர்; 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் தடையை மீறி பேனர் வைத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பிலிருந்து, கோரிமேடு வரை செல்லும் சாலை சென்டர் மீடியன்களில் நேற்று முன்தினம் வரிசையாக பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. ரோந்து சென்ற கோரிமேடு போலீசார், நேற்று முன்தினம் இரவுஅந்த பேனர்களை அகற்றினர்.மேலும், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் சந்திப்பில், திருமண வாழ்த்து பேனர் வைத்திருந்த அய்யங்குட்டிப்பாளையம் ராஜ்மோகன் மீதும், முருகா தியேட்டர் முதல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வரை சென்டர் மீடியன்களில் பேனர் வைத்த முத்திரைப்பாளையம் கோவிந்தன்பேட் அணைக்கரை வீதியைச் சேர்ந்த விக்னேஷ் மீதும், திறந்தவெளி அழகு சீர்குலைவு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுபோல், மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு சிக்னல் அருகே பேனர் வைத்திருந்த ஆகாஷ் ட்ரைம்ப் நிறுவனம் மீதும்,வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகே திருமண வரவேற்பு பேனர் வைத்திருந்த அடையாளம் தெரியாத நபர் மீதும், நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை மத்திய கோட்ட செயற்பொறியாளர் சீனிவாசன் புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீசார், பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை