போக்குவரத்துக்கு இடையூராக பேனர்; போலீசார் வழக்கு பதிவு
பாகூர்: போக்குவரத்திற்கு இடையூராக விளம்பர பலகை வைத்திருந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி - கடலுார் சாலை, முள்ளோடை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராகவும், அனுமதி இன்றியும் பேனர், மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, பொதுப்பணித்துறையினர் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் நடைபாதையை ஆக்கிரமித்து விளம்பர போர்டு வைத்திருந்ததாக குமார், 40, சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த சலீம், 38, கன்னியகோவில் முருகன், 46, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகூரில் பொது மக்களுக்கு இடையூறாக நடை பாதையை ஆக்கிரமித்து விளம்பர பலகை வைத்திருந்த சுல்தான்பேட்டை அசித்துல்லா, 60, பாகூர் சாகுல் ஹமீது, 35, மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக லாரியை நிறுத்தி வைத்திருந்த ஆராய்ச்சி குப்பத்தைச் சேர்ந்த நாகராஜன், 28, ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.