உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தடுப்பு கட்டை அமைக்கும் பணி

 தடுப்பு கட்டை அமைக்கும் பணி

அரியாங்குப்பம்: தேங்காய்த்திட்டு சாலையில் தடுப்பு கட்டை அமைக்கும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய்த்திட்டு மேட்டுத்தெரு பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த சாலையில் தடுப்பு கட்டை (சென்டர் மீடியன்) அமைக்க 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ, நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனுவாசன், இளநிலை பொறியாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ