உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேனீ வளர்ப்பு செயல் விளக்கம்

தேனீ வளர்ப்பு செயல் விளக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். வேளாண் அதிகாரி தனசேகரன் வரவேற்றார். வேளாண் வல்லுநர் ஜோசப் தேனீ வளர்ப்பு, தேன் மற்றும் இதர பொருட்களின் விற்பனை வாய்ப்புகள், நோய் தாக்குதல் தடுப்பு, தேன் சேகரிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.இதில், தேனீ வளர்போர், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். வேளாண் அதிகாரி தினேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !