இருவருக்கு பீர் பாட்டி குத்து
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ராம்குமார், 28; அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தேவராஜ், 42; ஆகிய இரண்டு பேரும் நேற்று நோணாங்குப்பம் ஆற்றங்கரைக்கு நடந்து சென்றனர். அந்த வழியாக வந்த, சண்முகா நகரை சேர்ந்த குணாளன், 48; ஏன் இந்த பக்கம் வருகிறீர்கள் என, இருவரை பார்த்து கோட்டார். அதில், இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த, குணாளன் அருகில் கிடந்த பீர் பாட்டிலால், ராம்குமார் முகத்தில் குத்தினார். அதை தட்டிக்கேட்ட தேவராஜிக்கும் பாட்டில் குத்து விழுந்தது. இதில், காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, குணாளனை தேடிவருகின்றனர்.