சிறந்த திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழா
புதுச்சேரி; இந்திய திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி மற்றும் 2023ம்- ஆண்டிற்கான, மலையாள திரைப்படத்திற்கு, சிறந்த விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது.புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து, இந்திய திரைப்பட விழாவின், தொடக்க விழா மற்றும் 2023ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழா நாளை 13ம் தேதி நடக்கிறது.ஒயிட் டவுன், சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில், மாலை 6:00 மணிக்கு நடக்கும் விழாவில், காதல் தி கோர் என்ற மலையாள திரைப்படத்திற்கு சிறந்த விருது வழங்கி, படத்தின் இயக்குனர் ஜியோ பேபி கவுரவிக்கப்படுகிறார்.இவ்விழாவை முன்னிட்டு, அன்று, காதல் தி கோர் திரைப்படம், 14ம் தேதி ரபின்ந்ர கப்யா ரகஷ்யா (பெங்கால்), 15ம் தேதி, காதல் என்பது பொதுவுடைமை (தமிழ்), 16ம் தேதி சினிமா பந்தி என்பது (தெலுங்கு), 17ம் தேதி, வேக்சின்வார் (இந்தி) ஆகிய திரைப்படங்கள் இலவசமாக திரையிடப்படுகிறது.இவ்வாறு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.