உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் பரதநாட்டியம் அரங்கேற்ற விழா

 ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் பரதநாட்டியம் அரங்கேற்ற விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் 16ம் ஆண்டு பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா ஜிப்மர் கலையரங்கத்தில் நடந்தது. ஆதித்யா பள்ளியின் நிறுவனர் அன்னை விஜயலஷ்மி நினைவாக கொண்டாடப்பட்ட விழாவில், புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் பயிலும் ஹேமாஸ்ரீ, வைஷ்ணவி, கயல் வளர்மதி, சாதனா, மிதுலா, சாச்சிதா. சாரிகாஸ்ரீ, ஆகிய ஏழு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் ஸ்ரீஜெனனி, அகஸ்தியா, அக்ஷித்தா, சென்சிய மகிழினி, அக்ஷயா, கவுசிகா, தயாழினி, சாதனாஸ்ரீ, காவிய தர்ஷிணி, கிருத்திகா, ஒச்சம்மாள், கேஷிகா, நந்தனா, ஜோலிதா, மதுமிதா ஆகிய பதினைந்து மாணவிகளின் சலங்கைபூஜை நிகழ்ச்சி, புஷ்பாஞ்சலியில் தொடங்கி அலாரிப்பூ, ஜதீஸ்வரம், வர்ணம், பதம், கீர்த்தனை, தில்லானா வரிசை பரதக்கலை நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை நிறுவனர் அனுதாபூனமல்லி, ஆர்த்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜையில் சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கும், இந்திய தேசிய அளவில் நடைபெற்ற ஜாங்கிருதி போட்டி, தேசிய அளவில் வெற்றிபெற்ற ஆதித்யா நடன குழு மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ