உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில்லில் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஆரோவில்லில் பரதநாட்டிய நிகழ்ச்சி

வானுார் : ஆரோவில் பாரத் நிவாஸ் ஸ்ரீஅரவிந்தர் ஆடிட்டோரியத்தில், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அரசுக்கும், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளைக்கும் இடையே, சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி, கலாசார பரிமாற்ற நிகழ்ச்சியாக, சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணைச் செயலாளர் வஞ்சுளவள்ளி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.கவுரவ விருந்தினராக, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் பேசினார். இதில், குரு ஸ்ரீசாந்த சம்பத்குமார் நாட்டிய கலாலயா சிஷ்யர்களின் நடனம், பார்வையாளர்களை கவர்ந்தது.இந்தியாவின் வளமான கலாசார மரபுகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை, இந்நிகழ்ச்சி உணர்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை