உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாரதி ஆங்கில பள்ளி ஆண்டு விழா

 பாரதி ஆங்கில பள்ளி ஆண்டு விழா

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 37ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்கள் ஹரிஷ் குமார், மோகன் குமார் முன்னிலை வகித்தனர். அங்காளன் எம்.எல்.ஏ., கவிஞர் கோவிந்தராசு கலந்து கொண்டு, 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மற்றும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சுழற்கேடயம் வழங்கினர். புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன், துணைத் தலைவர் இளமதியழகன் வாழ்த்தி பேசினர். சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி குணசீலன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ப்ஜலுதீன், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுத் தேர்வுகளில் தொடர் சாதனை படைத்து வரும்பள்ளி நிர்வாகி சம்பத் மற்றும் தலைமையாசிரியர் சுசீலா சம்பத் ஆகியோருக்கு அங்காளன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தலைமையாசிரியர் சுசீலா சம்பத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ