மேலும் செய்திகள்
பள்ளிகளில் பாரதியார் பிறந்தநாள் விழா
13-Dec-2024
திருபுவனை: திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை மங்கலம், பொறுப்பாசிரியர் தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் விரிவுரையாளர் பாக்கியலட்சுமி வரவேற்றார்.விழாவில் புதுச்சேரி சட்டத்துறை மொழிபெயர்ப்பாளர் சுந்தரமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பாரதியார் குறித்து, பேசினார். ஆசிரியர் மோகன்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக பாரதியார் குறித்த ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடந்தது. ஆசிரியை சுசிலா நன்றி கூறினார்.
13-Dec-2024