உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

புதுச்சேரி : நெல்லித்தோப்பை சேர்ந்த செல்வி, 60; என்பவரிடம் கடந்த 2023ல், நெல்லித்தோப்பு கஸ்துாரி பாய் நகரை சேர்ந்த பிளோமினா, 44; என்பவர், தீபாவளி சீட்டாக மாதம் ரூ. 1,000 வீதம் 12 மாதங்கள் ரூ.12 ஆயிரம் செலுத்தினால், அதனுடன் ரூ. 3 ஆயிரம் சேர்த்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதைநம்பி, செல்வி தன்னுடன் 274 பேரை சீட்டில் சேர்த்து, ரூ. 2 லட்சத்து 74 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு ரூ.32 லட்சத்து 88 ஆயிரம் பிளோமினாவிடம் கட்டினார். தீபாவளி முடிந்து, ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 274 பேருக்கு 41 லட்சத்து 10 ஆயிரம் வழங்காமல், திடீரென பிளோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியர் தலைமறைவாகினர். இதுகுறித்து செல்வி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், லாஸ்பேட்டையை சேர்ந்த சுந்தரமூர்த்தி, கடந்த 2024ல் பிளோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியர் ஆகியோர் மீது அளித்த மோசடி புகாரின் பேரில், இருவரையும் முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இரண்டு வழக்கிலும் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதால், வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை