உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரு இடங்களில் பைக் திருட்டு

இரு இடங்களில் பைக் திருட்டு

புதுச்சேரி : இரண்டு இடங்களில் பைக்குகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார், லுார்து நகரை சேர்ந்தவர் நோயல் அந்தோணி, 18; தனியார் பாரா மெடிக்கல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். கடந்த மாதம் 18ம் தேதி, ரோமன் ரோலன்ட் வீதி அருகே தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.அதே போல, மூலக்குளத்தை சேர்ந்தவர் முகமது உசேன், 22. இவர் கடலுார் சாலை, அந்தோணியார் மஹால் அருகே கடந்த 29ம் தேதி தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை