உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி : தனியார் நிறுவன ஊழியர் பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல், 29; தனியார் கார் நிறுவன ஊழியர். இவர் தனது பைக்கை (பி.ஒய்.01.சி.இ.7282) கடந்த 20ம் தேதி மதியம் 1:30 மணியளவில், மூலகுளம் கார் ேஷாரும் எதிரில் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார். மாலை வந்து பார்த்தபோது இவரது பைக் திருடு போயிருந்தது. அவரது புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி