பைக் திருட்டு
புதுச்சேரி: மருத்துவமனை எதிரில் நிறுத்திய பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், நெற்குணம், புதுநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 44. இவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தம்பியை பார்க்க கடந்த 16ம் தேதி மதியம் 12:30 மணிக்கு தனது பைக்கில் (பி.ஒய்.01.பி.பி. 5710) வந்தார். பைக்கை மருத்துவமனை எதிரே நிறுத்தி விட்டு சென்றார். மாலை 4:30 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.