மேலும் செய்திகள்
வீட்டின் முன் நிறுத்திய பைக் மாயம்
12-Jun-2026
புதுச்சேரி: கோவில் எதிரில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், கிளியனுார், இந்திரா நகரை சேர்ந்தவர் தியாகராஜன், 38; கலெக் ஷன் ஏஜென்ட். இவர், கடந்த 12ம் தேதி காலை 10:30 மணியளவில், தனது அப்பாவுக்கு சொந்தமான பைக்கை (பி.ஒய்.01.சி.கியூ 4945) சேதராப்பட்டு - பத்துக்கண்ணு சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் எதிரில் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றனர். பின் திரும்ப வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Jun-2026