உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., - அ.தி.மு.க., பலமான கூட்டணி: அன்பழகன் பேட்டி அன்பழகன் பேட்டி

பா.ஜ., - அ.தி.மு.க., பலமான கூட்டணி: அன்பழகன் பேட்டி அன்பழகன் பேட்டி

புதுச்சேரி : எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணிக்கு கட்டுபட வேண்டியது அ.தி.மு.க.,வினரின் கடமை என, புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை ஏற்கிறோம். எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணிக்கு கட்டுபட வேண்டியது அ.தி.மு.க., வினரின் கடமை, பொறுப்பு ஆகும். தி.மு.க.,வை அரசியலில் இருந்து அகற்ற இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என்பது கற்பனை. இது பலமான வெற்றி கூட்டணியாகும். தேசிய அளவில் பல மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் கூட்டணியாகும்.அரசியலில் எந்த சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட வேண்டியது கட்சிகளின் கடமை. கூட்டணி பற்றி பேசுவதற்கு, காங்., - தி.மு.க., கட்சிகளுக்கு அருகதை கிடையாது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !