உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., ரத்த தான முகாம்

பா.ஜ., ரத்த தான முகாம்

புதுச்சேரி: பிரதமர் மோடியின் 25ம் ஆண்டு சேவையையொட்டி, காமராஜர் நகர் தொகுதி பா.ஜ., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. காமராஜர் சாலை தனியார் மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு பா.ஜ., மாநில அனைத்து பிரிவுகளின் இணை அமைப்பாளர் வேல்முருகன், மருத்துவர் பிரிவு மாநில அமைப்பாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். மாநில அலுவலக பொறுப்பாளர் ரவிச்சந்திரன், அலுவலக செயலாளர் கவுரிசங்கர், வில்லியனுார் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், தொகுதி பொறுப்பாளர் பிரகாஷ், மத்திய அரசு திட்டங்களின் பிரிவு அமைப்பாளர் கண்ணன், காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் முருகன், கலாசார பிரிவு அமைப்பாளர் மணிகண்டன், தொகுதி தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் ஜோதி உட்பட பல நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை