உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலியார்பேட்டையில் பா.ஜ., போட்டி அசோக்பாபு எம்.எல்.ஏ., பேச்சு

முதலியார்பேட்டையில் பா.ஜ., போட்டி அசோக்பாபு எம்.எல்.ஏ., பேச்சு

புதுச்சேரி: முதலியார்பேட்டை பா.ஜ., சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.பா.ஜ., கட்சியின் 45வது நிறுவன தினத்தினையொட்டி, முதலியார்பேட்டை சட்டசபை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தீவிர உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் அகத்தியர் ஹாலில் நடந்தது. தொகுதி தலைவர்புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ரஞ்சித் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அசோக் பாபு எம்.எல்.ஏ.,பங்கேற்றார் தொகுதியில், பா.ஜ.,வின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்.மேலும், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., நிச்சயம் போட்டியிடும். கட்சியின் வேட்பாளரை நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாகேஸ்வரன், வெற்றி செல்வம், செல்வ கணபதி, மகேஷ், மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், திருச்சந்திரன், ஓ.பி.சி., அணி தலைவர் நடராஜ் கலந்து கொண்டனர். பிரவீன் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் கிளை தலைவர்கள் தீவிர உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அலமேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ