உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., ஆலோசனை கூட்டம்

 பா.ஜ., ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்., மற்றும் தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ., புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக் களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மாநிலம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம், தசரத், ஜான் குமார் எம்.எல்.ஏ., மீனாட்சிசுந்தரம், விக்னேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான், செல்வம், மாநில துணை தலைவர்கள் பாஸ்கர், ரத்தினவேல், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமிநாராயணன், மாநில பிரிவு பொறுப்பாளர் அசோக் பாபு, மாநில தலைமை செய்தி தொடர்பாளர் அருள்முருகன், கணேசன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை