உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

 பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.,கள்., செல்வம், திப்பாய்ந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., அசோக் பாபு, தங்கவிக்ரமன், கணபதி, மாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தொகுதி தலைவர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் கிளை மற்றும் தொகுதி அளவில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை