உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் அறுந்து விழுந்து பா.ஜ., நிர்வாகி படுகாயம்

பேனர் அறுந்து விழுந்து பா.ஜ., நிர்வாகி படுகாயம்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரசேரன் மனைவி சுமதி, 50; இவர், பா.ஜ., மாவட்ட நிர்வாகி. நேற்று பழைய துறைமுகம் பகுதியில், நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். பின். வீட்டுக்கு தனது ஸ்கூட்டரில், கடலுார் சாலை, நைனார்மண்டபம் வழியாக மதியம் 2:00 மணியளவில், சென்றார். அப்பகுதியில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஒருவரை வரவேற்று, சாலையோரத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பேனர் காற்றில் அறுந்து, ஸ்கூட்டரில் சென்ற சுமதி மீது விழுந்தது. அதில், அவரது கால் பகுதியில், ப டுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன், மருத்துவமனை சென்று சிகிச்சை பெ ற்றார். இதுகுறித்த, அவரது கணவர், குமரேசன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மரப்பாலத்தில் இருந்து, முருங்கப்பாக்கம் வரை சாலையோரத்தில், தொடர்ந்து, பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தி வருவதால், பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ