மேலும் செய்திகள்
பா.ஜ., சார்பில் நமோ யுவா ரன் மாரத்தான் போட்டி
22-Sep-2025
புதுச்சேரி : பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பர் பாரத்) திட்டம் குறித்து, கடந்த 25ம் தேதி முதல் டிசம்பர் 25ம் தேதி வரை, விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் 'சுயசார்பு இந்தியா' லோகோ 'என் வீட்டில் சுதேசி, வீட்டுக்கு வீடு சுதேசி' வெளியீட்டு விழா தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, 'என் வீட்டில் சுதேசி, வீட்டுக்கு வீடு சுதேசி ' என்ற சுயசார்பு இந்தியா லோகோவை வெளியிட்டார். இதில், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், மாநில பொறுப்பாளர்கள் ஜெயலட்சுமி, சரவணகுமார், கீதா, மாநில துணைத் தலைவர் அமாவாசை, ஊடகத் துறை அமைப்பாளர் நாகேஸ்வரன், மாவட்ட தலைவர்கள் அனிதா, கிருஷ்ணராஜ், சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநில தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தன்னிறைவு பாரதமாக உருவாக சுயசார்பு இயக்கத்தை நோக்கி முன்னேற வேண்டும் என பிரதமரின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக, வீடு தோறும் நோட்டீஸ் ஒட்டுவது, பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
22-Sep-2025