மணக்குள விநாயகர் கோவிலில் பா.ஜ.,வினர் தங்கத் தேர் இழுத்தனர்
புதுச்சேரி: பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால சிறப்பான ஆட்சியையொட்டி, புதுச்சேரி பா.ஜ.,வினர் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் இழுத்து, தரிசனம் செய்தனர். பிரதமர் மோடியின் 12ம் ஆண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில், மணக்குள விநாயகர் கோவிலில், புதுச்சேரி பா.ஜ.,வினர் நேற்று காலை தங்கத்தேர் இழுத்தனர். இதில், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், ஜான்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, கட்சியினர் மூலவர் விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.