உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி

 பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி வகுப்பை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். புதுச்சேரி, நுாறடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ., சார்பில் வாக்களார் பட்டியல் திருத்த பணிக்கான, ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். நிகழ்சியில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன் குமார், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பில், 28 தொகுதிகளை சேர்ந்த பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். மாகே மற்றும் ஏனாம் தொகுதி முகவர்கள் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி