உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., புதுப்பேட்டை கிளை சாதனை விளக்க பிரசாரம்

 பா.ஜ., புதுப்பேட்டை கிளை சாதனை விளக்க பிரசாரம்

புதுச்சேரி: உழவர்க்கரை மாவட்டம், தட்டாஞ்சாவடி தொகுதி பா.ஜ., புதுப்பேட்டை கிளை சார்பில், பிரதமரின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ரமணாஷங்கர் ஏற்பாட்டில் தொகுதி தலைவி கவிதா அன்பரசன் தலைமையில் நடந்தது. கிளை தலைவி வனிதா முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் மற்றும் காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் முருகன் கலந்து கொண்டு பிரதமரின் சாதனைகளை விளக்கி பேசினர். தொகுதி பொதுச்செயலார் அண்ணாதுரை, ரமாபாபு, மூத்த நிர்வாகி சந்தோஷ், கேந்திர பொறுப்பாளர் நளினி, தொகுதி துணைத் தலைவர் தேவராஜ், செயலாளர் முருகவேல், மஞ்சு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை