உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 2026 ல் பா.ஜ., ஆட்சி ஜான்குமார் எம்.எல்.ஏ.,விருப்பம்

புதுச்சேரியில் 2026 ல் பா.ஜ., ஆட்சி ஜான்குமார் எம்.எல்.ஏ.,விருப்பம்

புதுச்சேரி : வரும் 2026ம் ஆண்டு, புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி அமைக்க கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பதவியேற்பு விழாவில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசினார். ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:புதுச்சேரி மாநிலம் முன்னுக்கு வந்திருக்க வேண்டும் என்றால், நாம் ஆட்சியளராக வந்திருக்க வேண்டும். பா.ஜ. ஆட்சி வந்தால் மட்டுமே புதுச்சேரியில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியும். இதை தான் கடந்த தேர்தலில் நான் சொன்னேன். பிரதமர் மோடியால் தான் காஸ் மானியம், பெண்களுக்கு மாதம் ஆயிரம், பெண்கள் குழந்தைகள் பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் என நமக்கு கிடைத்து வருகிறது.புதுச்சேரிக்கு இந்தாண்டு, 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிட்டில், 2 ஆயிரத்து 50 கோடி ரூபாய் இலவச திட்டத்திற்கு மட்டும் சென்றதற்கு காரணம் மத்தியில் உள்ள பா.ஜ., தான். புதுச்சேரியில் 7 ஆயிரம் கோடி தான் வருமானம் வருகிறது. மீதம் உள்ள 6 ஆயிரம் கோடியை கொடுப்பது மத்திய பிரதமர் மோடி அரசுதான . வரும் 2026ம் ஆண்டு பா.ஜ., கட்சி புதுச்சேரியில் ஆட்சி அமைத்து, கடன் இல்லா மாநிலமாக உருவாக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை