உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., மாநில பொதுக்குழு கூட்டம்

பா.ஜ., மாநில பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் பழைய துறைமுகத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வல், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், செல்வகணபதி எம்.பி., முன்னிலை வகித்தனர். இதில், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, வெங்கடேசன், கணபதி, தங்கவிக்கிரமன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன்,துணைத் தலைவர்கள் ரத்தனவேல், அகிலன், ஜெயலட்சுமி, சரவணன், அமாவாசை, ஜெயக்குமார், பிரமுகர் முத்தழகன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பீகார் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால், ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதாக இண்டியா கூட்டணி பொய் பிரசாரம் செய்து, தேர்தல் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், பிரதமர் மீதும் கூறும் பொய் குற்றச்சாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சாலை வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவைகளை செயல்படுத்த ரூ.4,750 கோடி கடன் பெற்ற புதுச்சேரி அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி - மரக்காணம் இடையே நான்கு வழி சாலை திட்டத்திற்கு ரூ. 2,157 கோடி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை