உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டில்லியில் குண்டு வெடிப்பு புதுச்சேரியில் வாகன சோதனை

டில்லியில் குண்டு வெடிப்பு புதுச்சேரியில் வாகன சோதனை

புதுச்சேரி: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரியில் போலீசார் நேற்று இரவு அதிரடியாக வாகன சோதனை மேற்கொண்டனர். டில்லி செங்கோட்டை, மெட்ரோ ஸ்டேஷன், அருகே மாலை கார் குண்டு வெடித்து 9 பேர் இறந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில், டி.ஜி.பி., ஷாலினிசிங் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் மேற்பார்வையில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் போலீசார் மாநில எல்லை பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம், ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இ.ஆர்.எஸ்.எஸ்., என்ற போலீஸ் குழுவின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் சோதனை புதுச்சேரியில் முக்கிய இடங்களில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் புதுச்சேரி ரயில் நிலையத்தில் சோதனையிட்டனர். வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்களின் பேக்கை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோ ல், பஸ் நிலையம், எல்லைப்பகுதிகள், சுற்றுலா இடங்கள், கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை