உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

புதுச்சேரி : புதுச்சேரி, இருதய ஆண்டவர் பசிலிக்கா 118 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனித வின்சென்ட் தெ பால், புனித எத்தியன் கிளை சபை இணைந்து 21ம் ஆண்டு ரத்த தான முகாமை நடத்தின. இருதய ஆண்டவர் பசிலிக்கா, வெல்டர் ஹாலில் நடந்த ரத்த தான முகாமிற்கு, பங்குத் தந்தை பிச்சைமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகபுதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் பங்கேற்று ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப் ராஜேஷ், ரத்த வங்கி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.திரளான கிறிஸ்துவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ரத்த தானம் அளித்தனர்.ஏற்பாடுகளை முதன்மை பணியாளர் ரெமோ மற்றும் சபை உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை