மேலும் செய்திகள்
நோணாங்குப்பத்தில் படகு சவாரி துவக்கம்
16-Dec-2024
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் படகு குழாமில் வெள்ளத்திற்கு பிறகு, கடந்த 2 நாட்களில் 14.5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.நோணாங்குப்பம் ஆற்றில் கடந்த 2ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, படகு குழாமில் இருந்த 5 படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. பாரடைஸ் பீச்சில் இருந்த குடில்கள், ஜெட்டிகள் சேதமடைந்தன. படகு குழாமில் சேதமான பொருட்களின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் ஆகும். படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டு வந்தது.பாரடைஸ் பீச் சீரமைப்பிற்கு பின், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.விடுமுறை நாட்களான நேற்று முன்தினம் சனி, நேற்று ஞாயிற்றுக்கிழமை என, இரு நாட்களில், 14.5 லட்சம் ரூபாய் சுற்றுலாப் பயணிகள் மூலம் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கிடைத்தது.
16-Dec-2024