மேலும் செய்திகள்
வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு
22-Nov-2024
புதுச்சேரி: வழுதாவூர் பக்கிரிப்பாளையம், ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் தீபன்ராஜ், 32; அவரது நண்பர்கள் இருவருடன் கடந்த 1ம் தேதி மழையை காண பைக்கில் சென்றார். துத்திப்பட்டு சுத்துக்கேணி வாய்க்கால் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, தீபன்ராஜ் வாய்க்காலில் தவறி விழுந்தார்.வாய்க்காலில் அதிக தண்ணீர் சென்றதால் தீபன்ராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார். கடந்த 3 நாட்களாக சேதராப்பட்டு போலீஸ், தீயணைப்பு வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் ட்ரோன் மூலம் தேடியும் கிடைக்கவில்லை.நேற்று காலை தீயணைப்பு துறை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். துத்திப்பட்டு கருப்பு பாலம் அருகே தீபன்ராஜ் உடல் மிதந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
22-Nov-2024